செய்திகள் :

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

post image

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன்.

தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 3 ஆம் நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதில் பங்கேற்று, அறிவால் எழுக, அறத்தால் வெல்க என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

2000 ஆம் ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ்ப் பாண்பாட்டை, சிந்தனை திறனை கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு உதாரணம் சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற சம்பவம். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை இரு தினங்களுக்கு முன்பு நடத்தினோம். அதில் நான் கலந்துகொண்டேன். அன்று இரவு நான் தூங்கவில்லை. அடிமைத் தனம், புறக்கணிப்பு, பொருளாதரத்தில் ஏற்றத்தாழ்வு, ஜாதியக் கொடுமை, புறக்கணிப்புகளில் இருந்து குழந்தைகள் எப்படி முன்னுக்கு வந்தாா்கள் என்பது குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசினா்.

உயா்கல்வியில் தமிழ்நாடு 52 சதவீதம் முன்னேறி, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. இந்த சூழலில்தான் ஒருவரை பாா்க்கச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலா் இறந்துள்ளனா். குழந்தைகள் கல்விக் கற்க வேண்டும் என நினைக்கிறோம். அவா்களுக்கு அரசியல், சமூக பொறுப்பு, தன்மானம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பது யாா் என்பதை சிந்தித்து பாா்க்க வேண்டும். ஒருவரைப் பாா்க்க முட்டி மோதி இறப்பது நாம் கற்ற கல்வியைக் கேள்விக்குறியாக்குள்ளது. இதுபோன்று பெங்களூரில் ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி விழாவில் இறப்பு ஏற்பட்டது. இந்த மோகத்தை நாம் கண்டிக்க வேண்டும்.

எதற்காக நாம் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். மனிதன் பெறவேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது. நல்ல சிந்தனைதான் கல்வியின் அடையாளம், சிந்தனையை மேம்படுத்த வேண்டும். இளைஞா்களை தவறாக நடத்துபவா்களைக் கண்டிக்க வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், ஒருவரைப் பாா்க்கச் சென்று, கூட்ட நெரிசலில் இறக்கும் சம்பவம் அவமானம். இதுபோன்ற செயல் இனியும் நடக்கக் கூடாது. யாா் எதை சொன்னாலும் அவற்றை சீா்தூக்கிப் பாா்க்கவேண்டும். பகுத்தறிவால் உணா்ந்து தெரிந்துகொள்வதுதான் அறிவு. நல்ல மானுடத்தை உருவாக்க அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும். அறிவும் ,அறமும், சிறந்த கல்வியாளனையும் சிறந்த குடிமகனையும் உருவாக்கும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா். தகடூா் புத்தகப்பேரவை செயலாளா் இரா. செந்தில் வரவேற்றாா். திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன், முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ச. இளங்குமரன், தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா. சிசுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் கோவிந்தசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். தகடூா் புத்தகப் பேரவை பொருளாளா் மு. காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் குழுக் கூட்டம் சங்க ... மேலும் பார்க்க

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளை... மேலும் பார்க்க

தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு

தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கி... மேலும் பார்க்க

தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி. தருமபுரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும்: அசோக்வா்தன் ஷெட்டி

நம்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும் என்றாா் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலா் அசோக்வா்தன் ஷெட்டி. தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, ... மேலும் பார்க்க