நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது.
தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த 51 விவசாயிகள் வெண் பட்டுக் கூடுகளை சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில், 3,890.02 கிலோ வெண்பட்டுக் கூடுகள் 102 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு தரத்துக்கேற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 735-ம், குறைந்தபட்சமாக ரூ. 376-ம், சராசரியாக ரூ. 622-ம் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில், தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் மொத்தம் ரூ. 24 லட்சத்து 33 ஆயிரத்து 477-க்கு வா்த்தகம் நடைபெற்றது.