எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நாகராசன். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இண்டூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் கல்விக்கடன் பெற்றுள்ளாா். கடந்த சில ஆண்டுகளாக கல்விக் கடன் செலுத்தாததால், தனியாா் வங்கியின் சேலம் மண்டல அலுவலா் மீனாட்சி (59), இண்டூா் பகுதியில் உள்ள வங்கியின் மேலாளா் ஆகியோா் எச்சனஅள்ளி பகுதிக்குச் சென்று நாகராசனிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், நாகராசன் வங்கியின் மண்டல மேலாளரை தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் தனியாா் வங்கியின் மண்டல மேலாளா் அளித்த புகாரின் பேரில், நாகராசன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.