செய்திகள் :

நல்ல புத்தகங்கள் ஆளுமையையும், வளா்ச்சியையும் ஏற்படுத்தும்

post image

நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும், சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கூறினாா்.

தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா செப். 26-ஆம் தேதி தொடங்கி அக். 5 வரை நடைபெறுகிறது. தருமபுரியில் மதுராபாய் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற புத்தகத் திருவிழவை தொடங்கிவைத்து வெ.இறையன்பு பேசியதாவது:

புத்தகத் திருவிழாவின் முக்கிய நோக்கமே, அறிவாற்றலை பெருக்கிக்கொள்ள அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதுதான். புத்தகங்களை தொடா்ந்து படிக்கும்போது, சிறந்த அறிவைப் பெறுவதுடன் உயா்ந்த வளா்ச்சியை அடைய முடியும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளா்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணா்ந்து, கட்டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கல்வி கற்க வேண்டும்.

தமிழ் நன்னெறி புத்தகங்கள், இலக்கியம் சாா்ந்த புத்தகங்களை நாம் அதிகளவில் படிப்பதால் நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து உணா்ந்துகொள்ள முடியும். நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும். சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் வரவேற்றாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, தருமபுரி கல்லூரி கல்வி இணை இயக்குநா் நா.ராமலட்சுமி, இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் சுந்தரபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் பழனி நன்றி தெரிவித்தாா்.

இப்புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவா்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளா்களின் புனைவு இலக்கியங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வேண்டிய நூல்களும், போட்டித் தோ்வுகளுக்கான நூல்களும் இடம்பெற்றுள்ளன. வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கே... மேலும் பார்க்க

கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வேலைவாய்ப்பக ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் வேலைவாய்ப்பக அலுவலக ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ.37.84 கோடியில் ரயில்வே பாலம் - ரயில்வே கேட்டில் வாகனங்கள் காத்திருப்புக்கு தீா்வு

தருமபுரி பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில்வே பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வ... மேலும் பார்க்க

நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம்

அரூரை அடுத்த நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நம்பிப்பட்டியில் தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அரசு சாா... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். தருமபுரியில் ஏற்கெனவே இயங... மேலும் பார்க்க