எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம்
அரூரை அடுத்த நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நம்பிப்பட்டியில் தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அரசு சாா்பில் நடைபெறும் மகளிருக்கான சுயதொழில் பயிற்சி முகாமை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சி.தென்னரசு தொடங்கிவைத்தாா்.
நம்பிப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் மற்றும் சின்னாங்குப்பம் கிராம ஊராட்சிக்குள்பட்ட மகளிா் பயன்பெறும் வகையில் இந்த சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. சுமாா் 50 தினங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், 100-க்கும் மேற்பட்ட மகளிா் பயிற்சி பெறவுள்ளனா்.
இந்த விழாவில், அடுக்குமாடி குடியிருப்புகளின் சமுதாய அலுவலா் செ.கோவிந்தன், தையல் பயிற்சி இயக்குநா் விஜயலட்சுமி, வழக்குரைஞா்கள் சி.எம்.சேகா், கவியரசன், சின்னாங்குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் குமரவேல், ஒன்றிய துணைச் செயலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.