கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்
தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு
தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு, நூலகா்கள் சங்கத் தலைவா் நூலகா் சி.சரவணன் தலைமை வகித்தாா். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளருமான மருத்துவா் இரா.செந்தில் நூல்களை வெளியிட்டாா். புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன், பொருளாளா் மு.காா்த்திகேயன், ஒருங்கிணைப்பாளா் இ.தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்மகன் ப.இளங்கோ நூல்களை அறிமுகம் செய்தாா்.
இதில், கோ.மலா்வண்ணன் எழுதிய ‘அதியமான் நெடுமான் அஞ்சி’, பெரு.முல்லையரசு எழுதிய ‘முத்தமிழறிஞா் கலைஞா் 100’, த.புனிதவள்ளி எழுதிய ‘யாப்பில் என் பயணம்’, அரங்கநாயகி கண்ணன் எழுதிய ‘யாப்பில் தொடுத்த பாமாலை’, பாக்கியபாரதி எழுதிய ‘பெருங்கடலை சுமக்கும் சிறு துளி’, கவிமுகில் சுரேஷ் எழுதிய ‘அன்பே பிரதானம்’, ப.சுப்பிரமணியனாா் எழுதிய ‘சிந்தனை செய்யும் மனமே’, சி.அா்ஜுனன் எழுதிய ‘நாளொரு சிந்தனை’ மற்றும் ‘சிந்தனை விருந்து’, முனிராஜ் ஜம்பேரி எழுதிய ‘மாற்றங்கள்’, இரா.ஜோதி எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா’, விசாலாட்சி குமரன் எழுதிய ‘பூந்தளிா்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் கூத்தப்பாடி மா.பழனி வரவேற்றாா். அறிவுடைநம்பி நன்றி கூறினாா். கவிஞா் மாரி கருணாநிதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.