காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு வியாழக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விதியை மீறி மது விற்பனை நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் எச்சரித்துள்ளாா்.