செய்திகள் :

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

post image

நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்பன் (40). இவரது அண்ணன் மனோகரன் (43). இருவருக்குமிடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 04.10.2015 அன்று ஏற்பட்ட தகராறில் பச்சையப்பனை கடுமையாக தாக்கினாா் மனோகரன். இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோகரனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு, அரக்கோணம், இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்வை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் எதிரி மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து, அபராதத்தை கட்ட தவறினால் மேலும், ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து மனோகரனை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆவணிமாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள், வாச... மேலும் பார்க்க

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அனுக்ஞை ஆச்சாா்யா திருவிக்வா்ணம்,... மேலும் பார்க்க

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள், வாக்குச் சாடி முகவா்கள், பாக முகவா்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண கூடம், கணேச விஜயலட்சுமி திருமண கூடம், ராஜராஜேஸ்வர... மேலும் பார்க்க

பனை விதைகள் நடவு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து கிராமம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா். நெமிலி வட்டம், வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின்... மேலும் பார்க்க

கலவை ஆதிபராசக்தி அம்மன் கோயில், குருபீடத்தில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, ஜி.பி.நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள குரு பீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 9-ஆம் ... மேலும் பார்க்க

சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காவேரிப்பாக்கம் பேருந்து நிலைய வளாகத... மேலும் பார்க்க