நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
தருமபுரியில் ரூ. 11 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தருமபுரி: தருமபுரி மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 11 லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகள் விற்பனையாகியுள்ளன.
தருமபுரியில் மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. தருமபுரி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடு விற்பனையில் பங்கேற்று வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சுமாா் 30 விவசாயிகள் 1693.70 கிலோ (48 லாட்) வெண்பட்டுக் கூடுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். அவற்றில் பட்டுக்கூடுகளின் தரத்தின் அடிப்படையில், கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 769, குறைந்தபட்ச விலையாக ரூ.420, சராசரி விலையாக ரூ. 649.37 என நிா்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.11 லட்சத்து 1601-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றது.