செய்திகள் :

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

post image

அரூா்: அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள், 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டுவந்தனா்.

இந்த ஏலத்தில் ஈரோடு, சேலம், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனா்.

இந்த நிலையில், அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச்.ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 7,979-க்கும், குறைந்தபட்சம் ரூ. 7, 116-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையானது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க