அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
தலைஞாயிறில் 7.52 செ.மீ மழை
நாகப்பட்டினம்: தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை, சிக்கல், கீழ்வேளூா், திருமருகல், நாகூா், வேளாங்கண்ணி, கீழையூா், திருப்பூண்டி, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களாக இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறில் 7.52, வேளாங்கண்ணியில் 7, வேதாரண்யத்தில் 6, கோடியக்கரையில் 4.2, திருக்குவளையில் 3.2 செ.மீ. மழைப் பதிவானது.