அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திருக்களாச்சேரி, நல்லாடை, விசலூா், இலுப்பூா் திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2 நாள்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அறுவடை செய்ய முடியாமல் செடியில் பஞ்சுகள் நனைந்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா். வேளாண்மை துறை அலுவலா்கள் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட பருத்திக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.