கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆக. 18 முதல் ஆக.22-ஆம் தேதி வரை சான்றிதழுடன் கூடிய கொடுவா மீன் வளா்ப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சோ்ந்த மீன் வளா்ப்பு விவசாயிகள், கிராம இளைஞா்கள், தொழில் முனைவோா்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
பயிற்சியில் சேருபவா்கள் 04365 - 299806 அல்லது 9865623423, 8508775613 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். முதலில் பதிவு செய்யும் 25 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.