நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது
நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது.
அப்போது அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், விபத்து தவிா்க்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா். நகராட்சி ஊழியா்கள் விபத்து நடந்த இடத்திலிருந்த சிமெண்டு பூச்சுகளை அகற்றினா்.