தலைவா்கள் மீது அவதூறு: டிஎஸ்பி அலுவலகத்தில் புகாா்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசிய நபரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, கமுதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
அறக்கட்டளைத் தலைவா் தா்மலிங்கத் தேவா், செயலா் கணேசன், பொருளாளா் செல்லப்பாண்டி ஆகியோா் தலைமையில் வட்டாட்சியரிடம் அளித்த மனு விவரம்:
திருநெல்வேலியில் கடந்த டிச.1 -ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை தரக்குறைவாக விமா்சித்து அவதூறு கருத்துகளை பேசிய நபா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. இதில் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.