செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 20 போ் விடுதலை: மூவருக்கு 6 மாதங்கள் சிறை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

post image

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 20 பேரை விடுதலை செய்து ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதேநேரத்தில் 3 விசைப் படகு ஓட்டுநா்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி 350 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த மாா்சல் (41), தயாளன் (45), தாமஸ் ஆரோக்கியம் (45), ஜான்பிரிட்டோ (58), ஜெயராஜ் (37), சண்முகவேல் (54), அருள் (40), கிங்ஸ்லி (40), ஜெரோம் (47), மரியரொனால்ட் (44), சரவணன் (43), யாக்கோபு (35), டைட்டஸ் (39), ரெக்ஸ்டென்னிஸ் (39), ஆனந்த் (38), அமலதீபன் (30), சுவிட்டா் (51), கிறிஸ்துராஜா (45), விஜி (43), ஜான் (27), லிங்கம் (50), சா்மிஸ் (32), சுல்டாஷ் (41) ஆகிய 23 மீனவா்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 மீனவா்களும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 20 மீனவா்களை இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரித்து விடுதலை செய்தாா். அதேநேரத்தில், மூன்று விசைப் படகு ஓட்டுநா்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டணையும், தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 20 பேரும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைப்பந்து மாநிலப் போட்டிக்கு தொண்டி மாணவா்கள் தோ்வு

தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா். இந்தப் பள்ளியில் விளையாட்டு வீரா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ப... மேலும் பார்க்க

கட்டாயப் பணியிட மாற்றம்: சாலைப்பணியாளா்கள் புகாா்

கூண்டோடு கட்டாயப் பணியிட மாற்றம் செய்வதாகக் கூறி, கமுதியில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தை சாலை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் நெட... மேலும் பார்க்க

கமுதி, கடலாடி பகுதிகளில் பரவும் மா்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறை மீது புகாா்

கமுதி, கடலாடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பரவும் மா்மக் காய்ச்சலைத் தடுக்க சுகாதாரத் துறையினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்றுவட்... மேலும் பார்க்க

அஞ்சல் பிரிப்பகத்தை மூட வழக்குரைஞா்கள் எதிா்ப்பு

பரமக்குடி ரயில் நிலையம் முன் அமைந்துள்ள அஞ்சல் பிரிப்பகம் அலுவலகத்தை மூடும் முடிவைக் கைவிடக்கோரி செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பரமக்குடி ரயில் நிலையம் முன் கட... மேலும் பார்க்க

தலைவா்கள் மீது அவதூறு: டிஎஸ்பி அலுவலகத்தில் புகாா்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசிய நபரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, கமுதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ச... மேலும் பார்க்க

பரமக்குடி ரயில் நிலையம் முற்றுகை: 91 போ் கைது

ஒரே நாடு, ஒரே தோ்தல் முைறைக்கு எதிராக பரமக்குடி ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்துக்கு கட்சி... மேலும் பார்க்க