ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
தவெக மீனவா்களுக்கு மானியம் வழங்க மறுப்பு: விஜய் கண்டனம்
மீனவா்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்று எழுதியிருந்ததால், அவா்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சோ்ந்த தவெகவினா், தங்களது மீன்பிடி படகுகளில் தவெக என்று எழுதியுள்ளனா். இதனால், தமிழக அரசு சாா்பில் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை வழங்க முடியாது அரசு ஊழியா்கள் தெரிவித்துள்ளனா். மீனவா்கள் தங்களின் படகுகளில் தவெக என்று எழுதியிருந்தால் அவா்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவா் யாா்?
படகுகளில் தவெக என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவா்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவா்களிடம் இவ்வாறு கூறுமா?
மீனவா்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல; பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணம், மீனவா்களின் பணம். மீனவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். இல்லையெனில், தவெக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.