செய்திகள் :

தாய்லாந்துக்கு உல்லாச சுற்றுலா சென்ற மகன்... கடத்தப்பட்டதாக கூறி விமானத்தை திருப்பிய எம்.எல்.ஏ!

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தானாஜி சாவந்த். முன்னாள் அமைச்சரான தானாஜி சாவந்த் மகன் ரிஷ்ராஜ் சாவந்த் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காணாமல் போய்விட்டார். அவர் புனே விமான நிலையத்தில் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இதையடுத்து தானாஜி சாவந்த் புனே போலீஸில் இது தொடர்பாக புகார் செய்தார். இதையடுத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீஸார் அது பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.

ரிஷிராஜ் தனது நண்பர்களுடன் விமானத்தில் சென்று இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். விமான நிறுவனம் ரிஷி ராஜ் குடும்பத்தினரை சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட்டிடம் பேச ஏற்பாடு செய்து கொடுத்தது.

தானாஜி சாவந்த் பைலட்டிடம் விமானத்தில் மகன் கடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தபோது பைலட் அதனை நம்பவில்லை. விமானம் பேங்காக் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து மத்திய விமானபோக்குவரத்து ஆணையத்திடமும் தனியார் விமான நிர்வாகம் இது தொடர்பாக பேசியது. விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் இச்செய்தியை உறுதிபடுத்தியதை தொடர்ந்து விமானம் நடுவழியில் தாய்லாந்து செல்லாமல் புனே நோக்கி திரும்பி கொண்டு வரப்பட்டது.

ரிஷிராஜ் சாவந்தும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் தொழில் விசயமாக பேங்காக் சென்று கொண்டிருந்ததாக கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இதை தங்களது வீட்டில் சொல்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் சென்றபோது அவர்களது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

`விமானத்தை பாதி வழியில் திருப்பியது இதுதான் முதல் தடவை..'

இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், "முதலில் ரிஷிராஜ் குடும்பத்தினரிடமிருந்து முதல் அழைப்பு வந்தபோது அதனை நாங்கள் நம்பவில்லை. அதன் பிறகு விமான போக்குவரத்து துறை அமைச்சகம், போக்குவரத்து துறை ஆணையத்திடம் இது தொடர்பாக பேசியபோது, கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகுதான் விமானத்தை புனே நோக்கி திருப்பமுடிவு செய்தோம். இது போன்று விமானத்தை பாதி வழியில் திருப்பி கொண்டு வந்தது கிடையாது" என்றார்.

ரிஷிராஜ் சாவந்த்

புனே திரும்பிய விமானம்..

விமானத்தை திரும்பும்படி போன் வந்தபோது விமானம் அந்தமான் நிகோபார் தீவுக்கு மேல் சென்று கொண்டிருந்தது. விமானத்தை புனே திருப்புவது குறித்து ரிஷிராஜ் சாவந்த்திடம் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தால் தேவையில்லாமல் வாக்குவாதம் ஏற்படும் என்று கருதி பைலட் சொல்லவில்லை. அதோடு விமானத்தில் பயணிகள் முன்பு இருந்த ஸ்கிரீன் மற்றும் வழித்தட மேப்பை பைலட் ஆப் செய்துவிட்டார். மூன்று பேரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். விமானம் புனே விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் ரிஷிராஜ் ஏன் விமானம் புனே வந்தது என்று கேட்டார். உடனே எங்களுக்கு கிடைத்த உத்தரவின் அடிப்படையில் விமானம் திரும்ப வந்திருப்பதாக தெரிவித்தார்.

விமானம்...

குடும்பத்துக்கு தெரியாமல் ரூ.78 லட்சம் செலவில் சுற்றுலா..

ரிஷிராஜ் சாவந்த் தனது குடும்பத்திற்கு தெரியாமல் தனியார் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். குடும்பத்திற்கு தெரியாமல் தாய்லாந்து சென்று வர ரிஷிராஜ் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

தாய்லாந்து உல்லாச சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமானது ஆகும். தனி விமானத்தை முன்பதிவு செய்ய ரிஷிராஜ் ரூ.78 லட்சம் செலவு செய்திருந்தார். ஆனால் அந்த அளவு செலவு செய்தும் தாய்லாந்து செல்ல முடியாமல் திரும்ப வந்ததால் ரிஷிராஜ் மிகவும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார். தானாஜி சாவந்த் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விமானத்தை திரும்ப அழைத்துள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

``தேர்வு தேதி மறந்து விட்டது'' -மலையிலிருந்து 5 நிமிடத்தில் பாராசூட்டில் வந்து தேர்வு எழுதிய மாணவர்!

மகாராஷ்டிராவில் இப்போது கல்லூரி மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வுக்கு செல்லும் போது மாணவர்கள் சிலர் தங்களது ஹால் டிக்கெட்டை மறந்துவிடுவதுண்டு. ஆனால் ஒரு மாணவர் தனது தேர்... மேலும் பார்க்க

Shikhar Dhawan: `ஆன்மிகம் வழியாகத்தான் என் மகனைப் பார்க்கிறேன்’ - அப்பாவாக வருந்தும் ஷிகர் தவான்

வருந்தும் தவான்பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவரின் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. இடதுக் கை ஆட்டக்காரரான இவர் மைதானத்தில் இருந்தபோதெல்லாம் துடிப்புடன் செயல்ப... மேலும் பார்க்க

கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!

Humpback Whale அல்லது கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று கயாகிங் (சிறிய வகை படகில் பயணம் செய்வது) செய்த நபரை அப்படியே விழுங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிலி நாட்டின் படகோனியா பகுதியில் எ... மேலும் பார்க்க

``வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன்" -கேரளா வந்த கும்பமேளா வைரல் பெண் மோனலிஸா!

கேரளாவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் போபி செம்மண்ணூர். நகைக்கடைகள் நடத்திவரும் இவர், தனது நிறுவனங்களின் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடிகைகளை அழைப்பது வழக்கம். நகைக்கடை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து ப... மேலும் பார்க்க

Valentine's Day: நீங்க உங்க காதலியை/காதலனை எவ்ளோ காதலிக்கிறீங்க; லவ் கால்குலேட்டர்ல பாத்துட்டிங்களா?

புதுப்பேட்டை படத்துல, `அம்மா-ன்னா யாருக்குதான் புடிக்காது. நாய், பூனைக்கு கூடத்தான் அம்மான்னா புடிக்கும்'-னு தனுஷ் சொல்ற மாதிரிதான் காதலும். எல்லா உயிர்களிலும் இருக்கக் கூடியது. ஆனாலும், பல வருஷம் காத... மேலும் பார்க்க