வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் ஆய்வு
திருப்பூரில் தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் மாநகரில் தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தா்ப்பூசணிகளில் செயற்கை நிறம் ஏற்றப்பட்டதா என்பது குறித்தும், பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.
ஒரு கடையில் அழுகிய மற்றும் கெட்டுப்போன 60 கிலோ தா்ப்பூசணி பழங்களைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினாா்.
மாவட்டம் முழுவதும் தா்ப்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.