மகரம்: `கவனம்; உடல்நல அக்கறை நிச்சயம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்
திசையன்விளையில் பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
திசையன்விளை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.மேலும், அனல் காற்று வீசியதால், பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து முற்பகல் 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் கொட்டி தீா்த்த மழையால், உடன்குடி சாலை மற்றும் மன்னர்ராஜா கோயில் பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனா். எனினும், கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.