லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டி பலகை திருத்தம்
வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான குறியீட்டில் இருந்த வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் சரி செய்தனா்.
வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. அங்கிருந்து செங்காளிபாளையம் செல்லும் தாா் சாலையில் பச்சாக்கவுண்டன்வலசு பிரிவு அருகில் வழிகாட்டி பலகை உள்ளது.
அதில், ஓலப்பாளையம், செங்காளிபாளையத்துக்கு நேராகச் செல்ல வேண்டுமென சரியாகவும், பச்சாக்கவுண்டன்வலசுக்கு வலது புறம் செல்ல வேண்டுமென தவறாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வலது புறம் சாலையே கிடையாது. பச்சாக்கவுண்டன்வலசு சாலைக்கு இடதுபுறம் திரும்ப வேண்டும்.
இது குறித்து, ‘தவறான வழிகாட்டி பலகை, மக்கள் அதிருப்தி’ என தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து வெள்ளக்கோவில் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலைத் துறையினா் வழிகாட்டி பலகையை சரி செய்தனா்.