சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் நடவடிக்கை
வீடுகளில் வா்த்தக ரீதியில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் வா்த்தக ரீதியில் சோப்பு, முக பவுடா், உதட்டு சாயம் போன்ற அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கக் கூடாது. அதற்கென தனி இடம் இருக்க வேண்டும். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புத் தேதி, சோ்க்கப்பட்ட பொருள்களின் விவரம், முழு முகவரி, உரிமம் குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும்.
முறையான அங்கீகாரம், உரிமம் பெறாமல் தங்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ள போதிலும் உரிமம் பெறாமல் பலா் வீடுகளில் ‘ஹோம் மேட்’, ‘நேச்சுரல்’ என பெயரிட்டு முக கிரீம், கண் மை, தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் தயாரிப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனா். மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் உரிய அனுமதியைப் பெற்றே அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.
திருப்பூா் மாவட்டம் உள்பட கோவை மண்டலத்தில், தர, அங்கீகார நடைமுறையைப் பின்பற்றி 37 மையங்கள் செயல்படுகின்றன. வீடுகளில் உரிமம் பெறாமல் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பது, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் சட்ட விரோதமாகும். வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2 இடங்களில் விதிகளை மீறி, அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தது கண்டறிப்பட்டுள்ளது. இதுதொடா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோா் வீடுகளில் இருந்து அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.