முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
தென்னந்தோப்பில் தேங்காய்கள் திருட்டு
பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் மா்ம நபா்கள் புகுந்து தேங்காய்களைத் திருடிச் சென்றுள்ளனா்.
பொங்கலூா் ஒன்றியம், செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவருக்கு மஞ்சப்பூா் பிரிவுக்கு எதிரே கிழுவங்காட்டுத் தோட்டத்தில் தென்னந்தோப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த தென்னந்தோப்புக்குள் மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு புகுந்து மரங்களில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தேங்காய்களை பறித்துச் சென்றுள்ளனா். மேலும் தேங்காய்களை அங்கேயே உரித்து மட்டைகளை போட்டு சென்றுள்ளனா்.
இது குறித்து விவசாயி ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.