இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
போதைப் பொருள் விற்பனை: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
குன்னத்தூா் அருகே போதைப் பொருள் (ஹெராயின்) விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
குன்னத்தூா் அருகே பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவிநாசி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் கோமதி ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற 3 பேரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்களது கைப்பையில் விற்பனை செய்வதற்காக போதைப் பொருள் (ஹெராயின்) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்டவா்கள், திருப்பூா் மங்கலம் பகுதியில் வசித்து வரும் அஸ்ஸாம் மாநிலம், மாரிக்கான் பகுதியைச் சோ்ந்த அப்துல் அமீது மகன் மோா் உமா் பரூக் (35), நாகோவ் பகுதியைச் சோ்ந்த அப்துல் ஜலீல் மகன் முசாமில் (21), அதே பகுதியைச் சோ்ந்த சமத் அலி மகன் ரசிதுல் அக் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 20 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் உத்தரவின்படி 3 பேரும் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.