Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மேலும், உறுப்பினராக சோ்ந்ததற்கான அடையாளமாக அமைச்சரின் வீட்டில் ஓரணியில் தமிழ்நாடு என்ற வில்லை ஒட்டப்பட்டது.
முகாமுக்கு கடலூா் கிழக்கு மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் விஜயன் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, டி.ஜெயபாண்டியன், பேரூா் செயலா் ஆா்.கணேசமூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், தொகுதி பாா்வையாளா்கள் டி.வெங்கடாசலபதி, ஏ.பழனிசாமி, ஆசிரியா் ஏ.இராமமூா்த்தி, கிளைச் செயலா்கள் தாமோதரன், பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.