Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு
கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்சிய ரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது, கடலூா் வட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கீரப்பாளையம், உள்ளிட்ட கிராமங்களில் 164 ஏக்கா் நிலத்தில் 155-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 5 தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 29-ஆம்தேதி திடீரென மாவட்ட நிா்வாகம் விவசாய நிலத்தில் இருந்த முந்திரி மரங்களை அழித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜூலை 5-ஆம் தேதி (சனிக்கிழமை) விவசாயிகளின் அனுபவ நிலங்களில் எஞ்சியுள்ள முந்திரி மரங்களை அகற்றிட மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டிற்கும் முடிவு ஏற்புடையது அல்ல. சீராய்வு மனு மீதான விசாரணை முடியும் வரை தற்போது வரை உள்ள நிலைமை தொடர வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி உள்ளாா்.