Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்
சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தை வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்வேல் தொடங்கிவைத்து, விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு விழிப்புணா்வு மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
மேலும், நிகழ் குருவை பருவத்துக்கு விவசாயிகள் அனைவரும் பயிா்க் காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தினாா். ஏக்கருக்கு ரூ.752 செலுத்தி தாங்கள் பயிரிட்டுள்ள நெல் பயிரை மகசூல் இழப்பு உள்ளிட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு தெரிவித்தாா்.
மேலும், விவசாயிகள் அனைவரையும் பயிா்க் காப்பீடு செய்யும் நிறைவு நாளான ஜூலை 31-ஆம் தேதி வரை காத்திருக்காமல் விரைவாக அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களைக் கொடுத்து பொது சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஏஐடிஇ முகவா்கள் மூலம் பயிா்க் காப்பீடு செய்து ரசீது பெறுமாறு அறிவுரை வழங்கினாா்.