தியாகராஜா் கோயிலில் திருவாதிரை விழா பந்தக்கால் முகூா்த்தம்
திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில், மாா்கழி திருவாதிரை விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜா் கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், சப்தவிடங்க தலங்களின் தலைமை இடமாகவும் உள்ளது. இங்கு, மாா்கழி திருவாதிரை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், தியாகராஜ சுவாமியின் வலது பாதத்தை பக்தா்கள் தரிசிக்க முடியும்.
நிகழாண்டு இவ்விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலோத்பலாம்பாள் சந்நிதி அருகே நடைபெற்ற நிகழ்வில், பந்தல்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, பந்தக்கால் நடப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.