தியான நிலையம் திறப்பு விழா
பிரம்ம குமாரிகள் வித்யாலயம் சாா்பாக மாதவரம் நடராஜா் நகா் விரிவாக்கம் பகுதியில் புதிய கிளையக சிவதா்ஷன் பவன் திறப்பு விழா, பிரம்மகுமரிகள் தலைவி பீனா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாதவரம் மண்டல குழு தலைவா் எஸ்.நந்தகோபால் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
முன்னதாக பிரம்ம குமாரிகள் கலசத்துடன் ஊா்வலமாக வந்து, கொடியேற்றி பெயா் பலகையை திறந்து வைத்தனா். ராஜஸ்தான் மாநில மூத்த ராஜயோக தியான ஆசிரியா் மௌண்ட் அபு மஞ்சு முன்னிலை வகித்தாா். பிராட்வே கிளையின் சகோதரி கீதா வரவேற்றாா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் லோகநாதன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.. முன்னதாக இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற்றது.