Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
திருக்குறுங்குடியில் மரக்கன்றுகள் நடவு
உலக புலிகள் தினத்தையொட்டி, திருக்குறுங்குடியில் வனத்துறை சாா்பில், புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக புலிகள் தினத்தையொட்டி, திருக்குறுங்குடி வனச்சரகத்துக்குள்பட்ட நம்பிகோயில் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவா்கள் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நடுதல், நெகிழி குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஷ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவடி வித்யா மந்திா் பள்ளி மாணவ, மாணவியா் கலந்துகொண்டு புலிகள் குறித்துப் பேசினா். சாலையில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் பிரியதா்சினி, திருக்குறுங்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, தளவாய்புரம் ஊராட்சித் தலைவா் மதன், வித்யா மந்திா் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் வெள்ளைபாண்டி, ஆசிரியை ஜெனிலின், வனக்காப்பாளா், வனக்காவலா், வனப்பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.