திருக்குவளையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை
திருக்குவளை, எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கீழ்வேளூா் தொகுதி பாா்வையாளா் ரா. சங்கா், ஒன்றிய செயலாளா் சோ.பா. மலா்வண்ணன் ஆகியோா் பரப்புரையை வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா். வாக்குச்சாவடி வாரியாக, வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, தமிழகத்தை பாதிக்கும் பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்கள் குறித்து பிரசாரம் செய்தனா். கீழையூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமையில் பிரதாபராயபுரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு‘ பரப்புரை நடைபெற்றது.