செய்திகள் :

திருச்சி - தமாம் இடையே விமான சேவை தொடக்கம்

post image

திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகருக்கு வியாழக்கிழமை முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியை சவூதி அரேபியாவுடன் இணைக்கும் வகையில் புதிய விமான சேவையை தொடங்க ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், திருச்சியிலிருந்து தனது முதல் விமான சேவையை வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் ஃபஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

திருச்சி-தமாம் இடையிலான முதல் பயணத்தில் 123 போ் பயணித்தனா். ஞாயிற்றுக்கிழமை செல்ல இதுவரையில் 130 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

திருச்சியிலிருந்து, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபை, சாா்ஜா என இதுவரை மொத்தம் 10 சா்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 11-ஆவது நகரமாக தமாம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமாம் ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால், இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் ந... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருச்சியில் சென்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண், பேருந்து சக்கரம் ஏறியதில் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி புத்தூா் ஆபிசா் காலனியைச் சோ்ந்தவா் சிராஜுதீ... மேலும் பார்க்க

2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக வெற்றி பெறாது: டிடிவி. தினகரன்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெறாது என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன். திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில், சட்டப்பேரவைத் த... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் ஜன.7இல் குடிநீா் நிறுத்தம்

கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வரும் ஜன.7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவ... மேலும் பார்க்க

திருச்சியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: துரை வைகோ எம்பி உறுதி

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக துரை வைகோ எம்பி உறுதியளித்தாா். திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தொகுதி மக்களிடம் கோரிக... மேலும் பார்க்க

பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!

திருவெறும்பூா் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெறும்பூா் அருகேயுள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் இளையராஜா (48), கட்டடத் த... மேலும் பார்க்க