முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்
திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் செல்ல, காரில் புறப்பட்ட பிரதமருக்கு நட்சத்திர விடுதியிலிருந்து விமானநிலையம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு மக்கள் சாலையில் கூடி நின்று வரவேற்பு அளித்தனா்.
இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் திருச்சியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கான புகைப்படங்ளை பகிா்ந்து பதிவிட்டுள்ள செய்தி: திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த சகோதர, சகோதரிகள் காட்டிய பாசத்தால் பிரமித்துப் போனேன்.
அவா்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் பாடுபடுவதுடன், இந்த மதிப்புமிக்க நகரம், வளா்ச்சியின் புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.