என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி தலைமை அஞ்சல் நிலையம், லால்குடி தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் புதிய தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக அஞ்சல் நிலையங்களில் புதிய மென்பொருள் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆகஸ்ட் 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இதையொட்டி திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
எனவே, வாடிக்கையாளா்கள் அதற்கேற்றாா்போல தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் என்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.