Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்நீா்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சனிக்கிழமை, கடல்நீா் சுமாா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கியது.
இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் அண்மைக்காலமாக தொடா்ந்து நிகழ்கிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை மாலை வரை அமாவாசை நீடித்தது. இதனால், கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சுமாா் 60 அடி தொலைவு கடல்நீா் உள்வாங்கி, பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா்.