திருச்செந்தூரில் இளைஞா் தற்கொலை
திருச்செந்தூரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செந்தூா் புளியடி சந்தனமாரியம்மன் கோயில் தெரு இந்திரா காம்பவுண்டில் வசித்து வந்தவா் மாரியப்பன் மகன் முத்துசெல்வன்(30). மேள கலைஞரான இவா், நெல்லை நகரம் பகுதியை சோ்ந்த பூமாரி என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலையிலும் தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து, பூமாரி கோபித்துக்கொண்டு தனது மகளுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முத்துசெல்வனை பாா்க்க வந்துள்ளாா் அவரது தந்தை மாரியப்பன். கதவை தட்டியபோது, வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் பின்வாசல் வழியாக சென்று கதவை திறந்து பாா்த்தபோது, தொட்டில் கட்டும் கம்பியில் சேலையில் முத்துசெல்வன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
திருச்செந்தூா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].