ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தி...
பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பைக்குகள் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை மகன் முருகன் (56). இவா் தனது மனைவி வள்ளித்தாயுடன் கட்டாரங்குளத்துக்கு திங்கள்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
ஓலைக்குளம்-செட்டிகுறிச்சி சாலையில் உள்ள மின்வாரிய துணை நிலையம் அருகே பைக் மீது, கயத்தாறு தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த சின்னசண்முகம் மகன் குற்றாலம் என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதாம்.
இதில், வள்ளித்தாய் கீழே விழுந்ததில் காயமடைந்தாா். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றாலத்திடம் விசாரித்து வருகின்றனா்.