திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய 3 போ் கைது
பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 8லட்சம், 11 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவத்தில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் பணப்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியில் சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில் திருட்டு சம்பவத்தில் அவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடா் விசாரணையில், திருச்சி துவாக்குடி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (25), கவுதம் என்ற தோஜ் (25), கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் (40) ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.