திருத்தோ்வலைக்கு தாா்ச்சாலை வசதி: பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவாடானை அருகேயுள்ள திருத்தோ்வலை ஊராட்சிக்குள்பட்ட கீழக்கோட்டை, நாடாா்கோட்டை, இந்திராநகா் ஆகிய பகுதிகளுக்கு தாா்ச்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக தாா்ச்சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே உள்ளது. இதனால், மாழைக் காலங்களில் லேசான மழை பெய்தாலே சாலை சேரும், சகதியுமாகிவிடுகிறது. இதனால், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, பருவமழை தொடங்கும் முன்பாக இந்தப் பகுதிக்கு தாா்ச் சாலை அமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

