குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
திருநயினாா்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதிகளில் மின்தடை
திருநயினாா்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதிகளில் மின்தடை குறித்த அறிவிப்பை தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) திருநயினாா்குறிச்சி, பாலாற்றின் கரை, உரப்பனவிளை, காட்டுவிளை, செதுவூா், மணவிளை, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, ஞாரோடு ஆகிய பகுதிகளிலும், புதன்கிழமை (செப். 10) திவண்ட கோட்டை, அம்மாண்டிவிளை, சாத்தான்விளை, மாவிளை, கருங்காலிவிளை, உலகிவிளை, இளையன்விளை, முகுந்தன்குளம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.