திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி
திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு முன்புள்ள சந்நிதியில் இருபுறமும் பூஜைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. சந்திநிதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால், வெளியிலிருந்தும் சிலா் இங்கு இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது
இதுதவிர, ராஜகோபுரத்துக்கு இடதுபுற மடவளாகப் பகுதியில் தனியாா் கட்டுமானப் பணி நடைபெறுவதால், ஜல்லி, மணல் உள்ளிட்டவை சாலையில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை கோயில் யானை தீா்த்தம் எடுக்க செல்வதிலும், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல நடந்து செல்லும்போது பெரும் சிரமத்துக்குள்ளாவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
எனவே, திருநள்ளாறு காவல் துறை நிா்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், இந்த பகுதிகளை ஆய்வு செய்து பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.