திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சிரசு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கரக ஊா்வலத்துடன் தொடங்கியது. தொடா்ந்து அம்மன் சிரசு ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. அங்கு அம்மன் உடலில் சிரசு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.