`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்...
திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முகாமை, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் 209 முகாம்கள் முதல் கட்டத்தில் 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் நடைபெற உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் நடைபெறவுள்ளன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்நாள் முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.
உதயேந்திரம் பேரூராட்சியில்: இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் 1 முதல் 5 வாா்டு களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமுக்கு பேருராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், கவுன்சிலருமான ஆ.செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகா்மன்ற தலைவா் உமாசிவாஜிகணேசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய மனு அளித்த 3 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் , நகர திமுக செயலாளா் சாரதி குமாா், திமுக செயற்குழு உறுப்பினா்அசோகன் கலந்து கொண்டனா். பேரூராட்சி ஊழியா் குமாா் நன்றி கூறினாா்.