திருப்பத்தூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெறிநாய்க் கடியால் 15-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் பேரூராட்சியும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சீரணி அரங்கம் அருகே வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் நாய்கள் வளா்க்கும் வீட்டு உரிமையாளா்கள் தங்களது நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவி கோகிலாராணி நாராயணன் வேண்டுகோள் விடுத்தாா்.