திருப்பூரில் வங்கதேசத்தினா் 3 போ் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த இடுவம்பாளையம் அருகே உள்ள முருகம்பாளையத்தில் வங்கதேசத்தினா் சிலா் தங்கியிருப்பதாக வீரபாண்டி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். இதில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த மூசா அலி (26), அவரின் மனைவி நிஷாபேகம் (23), உறவினா் ரோனி அலி (22) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளனா்.
இந்தத் தம்பதிக்கு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.