3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை
திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை மாதம் திருப்பூா், உடுமலை பகுதிகளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திருப்பூரில் இருந்து பல்லடம் -உடுமலை வரை நெடுஞ்சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல்வா் திருப்பூா் வரவில்லை. பின்னா் அவரது பயணம் திட்டம் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி கோவையில் இருந்து உடுமலை, பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
இந்நிலையில் முதல்வா் வருகைக்காக திருப்பூரில் இருந்து பல்லடம் -உடுமலை வரை நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், தினமும் இச்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் அகற்றப்பட்ட இடங்களில் வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.