தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்
திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், 15 வேலம்பாளையத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.
இதில், தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினா் செல்வராஜ், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.