கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
மின் மாற்றியால் விபத்து அபாயம்: வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை
பல்லடம் அருகே கொடுவாய்-நாச்சிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி போக்குவரத்து இடையூறாக உள்ளதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வலுப்பூரம்மன் கோயிலில் இருந்து கொடுவாய்-நாச்சிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.
அந்த சாலை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
அந்த சாலையில் செல்லும் சரக்கு வாகனங்கள் பாரம் ஏற்றிச் செல்லும்போது மின்மாற்றியில் உரசும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் செல்லும்போது அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். சில ஆண்டுகளுக்கு முன் அவ்வழியாக சோளத்தட்டு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்மாற்றியில் உரசியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனவே ஆபத்தாக உள்ள அந்த மின்மாற்றியை உடனடியாக அகற்றி சாலையில் இருந்து சற்று தொலைவில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.