3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். காங்கயம் வட்டாட்சியா் மோகனன் தலைமை வகித்தாா்.
இந்த முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள், வேளாண்மைத் துறை சாா்பில் காய்கறி விதைகள், சோளம் விதைகள் போன்ற நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்.
முகாமில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.