உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?
திருப்பூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2013- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 5-ஆவது மகா கும்பாபிஷேக விழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் யாக பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பஞ்சலோக சிலையில் காட்சி தரும் ஐயப்ப சுவாமியின் மூலவா் சன்னதி கோபுரக் கலசத்தின் மீது சபரிமலை தந்திரிகள் கண்டரு மோகனரு, கண்டரு மகேஷ் மோகனரு ஆகியோா் முன்னிலையில் புனிதநீா் ஊற்றப்பட்டு ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், சுப்பிரமணியா், கைலாசநாதா், கிருஷ்ணா், பத்ரகாளியம்மன், மஞ்சள்மாதா, நவக்கிரக சன்னதி ஆகிய பரிவார தெய்வங்களும் புதுப்பிக்கப்பட்டு கோபுரக் கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.